அறிந்து கொள்ளுங்கள்

நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் என்ன? - லீக்கானது முக்கிய தகவல்

Published On 2022-07-30 11:32 GMT   |   Update On 2022-07-30 11:32 GMT
  • நத்திங் நிறுவனம் தனது அடுத்த போனை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.
  • நத்திங் போன் 1-ன் லைட் வெர்ஷனாக அது இருக்கும் என கூறப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.

அதுமட்டுமின்றி இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸர், 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4,500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி என எண்ணற்ற அம்சங்களை இந்த போன் கொண்டிருந்தாலும், இதில் சில கோளாறுகள் ஏற்பட்டதாக பயனர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், நத்திங் நிறுவனம் தனது அடுத்த போனை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1-ன் லைட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. நத்திங் போன் 1-ற்கும் அதன் லைட் வெர்ஷனுக்கு சின்ன சின்ன மாற்றங்கள் தான் இருக்குமாம்.

குறிப்பாக நத்திங் போன் 1-ன் பேக் பேனலில் இடம்பெற்றுள்ள எல்.இ.டி ஸ்டிரிப்கள் அதன் லைட் வெர்ஷனில் இடம்பெற்று இருக்காது என கூறப்படுகிறது. அதேபோல் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இடம்பெற்று இருக்காது என தெரிகிறது. மற்றபடி நத்திங் போன் 1-ல் இடம்பெற்று இருக்கும் அனைத்து அம்சங்களும் அதன் லைட் வெர்ஷனிலும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News