ஆட்டோ டிப்ஸ்

இந்தியாவில் 2 ஆயிரம் கார்களை ரிகால் செய்யும் மெர்சிடிஸ் பென்ஸ்

Update: 2022-06-14 05:08 GMT
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து உள்ளது.
  • சர்வதேச சந்தையில் சுமார் பத்து லட்சம் கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் ரிகால் செய்வதாக அறிவித்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2 ஆயிரத்து 179 கார்களை இந்திய சந்தையில் இருந்து ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் 2005 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் GL மற்றும் ML கிளாஸ் எஸ்.யு.வி. மற்றும் R கிளாஸ் எம்.பி.வி.க்கள் ஆகும்.


வாகனத்தின் பிரேக் பூஸ்டரில் துருப் பிடித்து இருக்கலாம் என்றும், இது பிரேக்கிங்கின் போது அசௌகரியம் அல்லது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் உலகம் முழுக்க சுமார் பத்து லட்சம் கார்களை ரிகால் செய்வதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. அப்போதும் இதே காரணத்தை மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News