அறிந்து கொள்ளுங்கள்

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்... இனி நீங்களும் யுபிஐ உடன் இணைத்துக்கொள்ளலாம்

Published On 2022-06-09 11:36 GMT   |   Update On 2022-06-09 11:36 GMT
  • யுபிஐ பேமன்ட்களில் இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
  • முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படுமாம்.

யுபிஐ பேமன்ட்களின் செயல்பாடுகளில் முக்கிய முன்னேற்றமாக, கிரெடிட் கார்டுகளையும் யுபிஐ செயலிகளில் இணைக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது முன்னதாக யுபிஐ பேமன்ட்களில் டெபிட்கார்டுகளை மட்டும் இணைக்கும் வசதி இருந்தது. இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.

முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படும் எனவும் அதன்பின் மாஸ்டர் கார்டு, விசா போன்ற கிரெடிட் கார்டுகளுக்கு அந்த வசதி நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை பயனர்கள் டெபிட் கார்டுகளை மட்டும்தான் இணைத்திருக்க முடியுமாம்.


ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அது முடிந்த பின் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திதாஸ் தாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பயனர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகள் அல்லது நடப்பு கணக்குகளை யுபிஐ பேமன்டில் இணைத்துக்கொள்ளும் வசதி தற்போது இருந்து வருகிறது.

இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் பயனர்கள் யுபிஐ செயலியில் இணைத்துக் கொள்ளும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கும் பின்னர் படிப்படியாக மாஸ்டர் கார்டு, விசா போன்ற மற்ற கிரெடிட் கார்டுகளுக்கும் அந்த வசதி நீட்டிக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News