ஆட்டோ டிப்ஸ்

இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டிய கியா இந்தியா

Update: 2022-08-13 11:45 GMT
  • கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
  • இந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா நிறுவனம் இந்தியாவில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது செல்டோஸ் கார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட் கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் இந்த இலக்கை எட்டி இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா இந்தியா தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. இது தவிர கியா செல்டோஸ் அறிமுகமாகியும் மூன்று ஆண்டுகள் முடிகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் அதிக பிரபலமான கார் மாடலாக கியா செல்டோஸ் விளங்குகிறது.


இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 60 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் 91 நாடுகளுக்கு 1 லட்சத்து 03 ஆயிரத்து 033 செல்டோஸ் யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.

சமீபத்தில் தான் கியா நிறுவனம் இந்திய விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்து இருந்தது. இதில் செல்டோஸ் மாடல் மட்டும் 60 சதவீத பங்குகளை பெற்று இருந்தது. செல்டோஸ் ஒட்டுமொத்த விற்பனையில் டாப் எண்ட் மாடல் மட்டும் 58 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

செல்டோஸ் பாடலை வாங்கிய பத்து பேரில் ஒருவர் iMT வேரியண்டை தேர்வு செய்து இருக்கின்றனர். செல்டோஸ் பாடலை பொருத்தவரை பெட்ரோல், டீசல் வேரியண்ட்கள் சம அளவு விற்பனையை பெற்றுள்ளன. 

Tags:    

Similar News