அறிந்து கொள்ளுங்கள்

அறிமுக சலுகையுடன் ஜியோ 5ஜி டெஸ்டிங் துவக்கம்

Published On 2022-10-05 04:10 GMT   |   Update On 2022-10-05 04:10 GMT
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கி விட்டது.
  • முதற்கட்டமாக 5ஜி பீட்டா சோதனையை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 5ஜி சேவைகளின் பீட்டா டெஸ்டிங் நடைபெற இருக்கிறது. தசரா பண்டிகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நகரங்களில் 5ஜி சேவைகளுக்கான வெளியீடு தயாராகி வருகிறது. மேலும் 5ஜி பீட்டா டெஸ்டிங்குடன் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. பீட்டா டெஸ்டிங்கின் அங்கமாக ரிலையன்ஸ் ஜியோ தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் முழுமையான 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். இத்துடன் சேவை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

தீபாவளி வாக்கில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதை அடுத்து தற்போது 5ஜி பீட்டா டெஸ்டிங் துவங்கப்பட்டு உள்ளது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் (SA) தளத்தில் வெளியாகிறது.

ஜியோ ட்ரூ 5ஜி அறிமுக சலுகைகள்:

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரனாசியில் ஜியோ 5ஜி அறிமுக சலுகைகள் இன்விடேஷன் முறையில் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.

நான்கு நகரங்களை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் பீட்டா டெஸ்டிங் துவங்கும். இதுபற்றிய அறிவிப்பு படிப்படியாக வெளியிடப்படும்.

சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவம் அனைத்து வாடிக்கையாளருக்கும் கிடைக்கும் வரை பயனர்கள் பீட்டா டெஸ்டிங்கில் பயன்பெற முடியும்.

இன்வைட் செய்யப்பட்ட ஜியோ அறிமுக சேவை பயனர்கள் தானாக 5ஜி சேவைக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்கள் தனியே 5ஜி சிம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு மொபைல் போனிலும் தலைசிறந்த 5ஜி சேவையை வழங்க ஏதுவாக மொபைல் போன் உற்பத்தியாளர்களுடனும் ஜியோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

Tags:    

Similar News