அறிந்து கொள்ளுங்கள்

வெளியீட்டுக்கு முன்பே லீக்கானது ஐகூ 9T ஸ்மார்ட்போனின் விலை

Published On 2022-07-29 07:53 GMT   |   Update On 2022-07-29 07:53 GMT
  • ஐகூ 9T ஸ்மார்ட்போன் 4,700 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • அதுமட்டுமின்றி இதில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெற்று இருக்கிறதாம்.

ஐகூ நிறுவனம் இந்தியாவில் அதன் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து இருந்தது. அதன்படி 9 சீரிஸில் இதுவரை ஐகூ 9, ஐகூ 9 ப்ரோ, ஐகூ 9 SE ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ஐகூ 9T என பெயரிடப்பட்டுள்ள அந்த புது மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 SoC புராசஸரை கொண்டிருக்கும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவும் இதில் இடம்பெற்றுள்ளது. ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 4,700 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.


சமீபத்திய தகவல்படி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49 ஆயிரத்து 999 எனவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண் விலை ரூ.54 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த போன் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் அமேசான் மற்றும் ஐகூவின் இ-ஸ்டோர்களிலும் விற்பனைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News