அறிந்து கொள்ளுங்கள்

இந்த தவறை மட்டும் செஞ்சுடாதீங்க.. பொது WIFI பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

Published On 2025-04-27 15:42 IST   |   Update On 2025-04-27 15:42:00 IST
  • தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.
  • மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசு எச்சரித்துள்ளது.

விமான நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. ஆனால் அது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.

இந்தப் பொது வைஃபை நெட்வொர்க்குகளில் பல முறையாகப் பாதுகாக்கப்படவில்லை, இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற முக்கியமான செயல்களைச் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் பொது வைஃபையில் பாதுகாப்பற்ற இணைப்புகளை எளிதில் ஹேக் செய்து விடுகின்றனர். இதனால் பயனர்கள், தரவு திருட்டு, நிதி இழப்பு மோசடிக்கு ஆளாக நேரிடும்.

இதுபோன்ற நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News