அறிந்து கொள்ளுங்கள்

குறைந்த விலையில் புது மேக்புக் மாடல்... வெளியான புது தகவல்கள்

Published On 2026-02-16 11:38 IST   |   Update On 2026-02-16 11:38:00 IST
  • M சீரிஸ் பிராசஸரை விட ஐபோன் சிப்செட் வழங்கப்படுகிறது.
  • 13 இன்ச் அளவுக்கும் சிறிய டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய குறைந்த விலை மேக்புக் மாடல் வருகிற மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. புதிய மேக்புக் குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்ட தகவல்களில், புதிய மேக்புக் மாடல் அலுமினியம் பில்டு, ஐபோன் தர பிராசஸர் மற்றும் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் விலை 1000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 90,691 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

தற்போது J700 என்ற குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய மேக்புக் மாடல் பிளாஸ்டிக் தவிர்த்து முழுமையான அலுமினியம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும். இதற்காக ஆப்பிள் நிறுவனம் ரிவைஸ்டு ஷெல்-ஃபோர்ஜிங் வழிமுறையை உருவாக்கி இருக்கிறது. இது சற்றே குறைந்த விலை, அதிவேகமாக உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். தற்போதைய நோட்புக் மாடலை விட புதிய மேக்புக் உற்பத்தி சற்றே குறைந்த விலையில் மேற்கொள்ள முடியும்.

விலையை குறைவாகவே வைத்திருக்க புதிய மேக்புக் மாடலில் தற்போதைய M சீரிஸ் பிராசஸரை விட ஐபோன் சிப்செட் வழங்கப்படுகிறது. இது டாப்-எண்ட் மேக் நோட்புக் மாடல்களில் இருந்த புதிய மேக்புக் மாடலை வித்தியாசப்படுத்தும். இந்த மாடலில் 13 இன்ச் அளவுக்கும் சிறிய டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் மாடலை லைட் எல்லோ, லைட் கிரீன், புளூ, பின்க், சில்வர் மற்றும் டார்க் கிரே என பல வண்ணங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எனினும், வெளியீட்டின் போது எத்தனை நிறங்கலில் இந்த மேக்புக் அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

Tags:    

Similar News