மொபைல்ஸ்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 12 ஜிபி ரேமுடன் உருவாகும் சியோமி 13

Update: 2022-11-26 04:14 GMT
  • சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
  • கீக்பென்ச் டெஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 1497, மல்டி கோரில் 5089 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், வெளியீட்டுக்கு முன் புதிய சியோமி 13 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. சியோமி 13 சீரிசில், சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் ப்ரோ மாடல் உயர் ரக அம்சங்களை கொண்டிருக்கும்.

அதன்படி புதிய சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் அல்லது குறைந்த ரேம் கொண்ட வேரியண்ட்களும் அறிமுகம் செய்யப்படலாம். கீக்பென்ச் 5 லிஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் 2211133C எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் சார்ந்த MIUI வழங்கப்படுகிறது. கீக்பென்ச் டெஸ்டிங்கின் சிங்கில் கோரில் 1497 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 5089 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இவை தவிர புதிய ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் கீக்பென்ச் தளத்தில் இடம்பெறவில்லை.

எனினும், முந்தைய தகவல்களின் படி சியோமி 13 மாடலில் லெய்கா பிராண்டு லென்ஸ், MIUI14 வழங்கப்படும் என கூறப்பட்டது. விரைவில் சியோமி 13 பற்றிய அறிவிப்பு மற்றும் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News