மொபைல்ஸ்

பயனர்களுக்கு அதிர்ச்சி... மிகவும் பிரபல ரீசார்ஜ் திட்டத்தை நீக்கிய வோடபோன் ஐடியா

Published On 2025-10-06 14:45 IST   |   Update On 2025-10-06 14:45:00 IST
  • ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது.
  • ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள்.

வோடபோன் ஐடியா (Vi) அதன் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றான ரூ.249 திட்டத்தை நீக்கியுள்ளது. ரூ.249 திட்டம் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ரூ.249 திட்டம் முன்பு 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வந்தது. இந்தத் திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உடன் வருகிறது.

பிரபல ரீசார்ஜ் திட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், வோடபோன் ஐடியா இன்னும் ரூ.239 திட்டத்தை வழங்குகிறது, இது இன்னும் ஒரு நல்ல சலுகையாகும். ரூ.239 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்து. இத்துடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது.

1.5 ஜிபி அல்லது அதற்கும் மேற்பட்ட தினசரி டேட்டாவை வழங்கும் அதிக விலை திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய பயனர்களை தூண்டுவதற்காக வோடபோன் ஐடியா (Vi) இந்த திட்டத்தை நீக்கியிருக்கலாம். இதற்கு பிறகு, மலிவு விலை வரம்பை (ரூ.300க்குக் கீழ்) பார்க்கும்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 1 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை பெரும்பாலும் நீக்கியுள்ளன. ஜியோ இன்னும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.209 திட்டத்தை வழங்குகிறது.

ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள். நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.

மலிவு விலை பேக்குகள் பிரிவின் கீழ் ஜியோ வழங்கும் மேலும் இரண்டு திட்டங்கள் உள்ளன, அவை ரூ.189 மற்றும் ரூ.799 விலையில் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் கால்ஸ் வழங்குகின்றன. ஆனால் ரூ.189 திட்டத்துடன், பயனர்கள் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ.799 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும் இது 84 நாட்கள் சேவை செல்லுபடியை வழங்குகிறது.

Tags:    

Similar News