மொபைல்ஸ்

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான விவோ X90 சீரிஸ்

Published On 2023-02-04 04:30 GMT   |   Update On 2023-02-04 04:30 GMT
  • விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
  • இரு மாடல்களிலும் இன்-டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

விவோ நிறுவனம் தனது X90, X90 ப்ரோ மற்றும் X90 ப்ரோ பிளஸ் மாடல்களை கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர் கொண்ட X90 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் கிடைப்பதாக விவோ அறிவித்து இருக்கிறது. சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று மாடல்களில் விவோ X90 ப்ரோ பிளஸ் மாடல் மட்டும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.

அம்சங்களை பொருத்தவரை விவோ X90 மற்றும் X90 ப்ரோ மாடல்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 6.78 இன்ச் 10-பிட் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 120Hz ரிப்ரெஷ் ரேட், 1260 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றன. இத்துடன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, செய்ஸ் டியூன் செய்யப்பட்ட கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களும் தோற்றத்தில் ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன.

விவோ X90 மற்றும் X90 ப்ரோ அம்சங்கள்:

6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD+ BOE Q9 OLED HDR10+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் டிமென்சிட்டி 9200 பிராசஸர்

இம்மோர்டலிஸ் G715 GPU

12 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

டூயல் சிம் ஸ்லாட்

X90 - 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS

12MP அல்ட்ரா வைடு கேமரா

12MP 50mm போர்டிரெயிட் கேமரா

X90 ப்ரோ- 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS

12MP அல்ட்ரா வைடு கேமரா

50MP 50mm போர்டிரெயிட் கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

யுஎஸ்பி டைப் சி

X90- 4810எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

X90 ப்ரோ- 4870எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்:

மலேசிய சந்தையில் விவோ X90 மாடல் ஆஸ்டிராய்டு பிளாக் மற்றும் பிரீஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. விவோ X90 ப்ரோ மாடல் லெஜண்டரி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இரு மாடல்களின் விலை இந்திய மதிப்பில் முறையே ரூ. 71 ஆயிரத்து 130 மற்றும் ரூ. 96 ஆயிரத்து 130 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News