அடுத்த வாரம் இந்தியா வரும் புது விவோ ஸ்மார்ட்போன்கள்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
- தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இவற்றில் 50MP 1 இன்ச் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
விவோ X100 சீரிஸ் இந்திய வெளியீடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விவோ வெளியிட்டு உள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஒன்றையும் விவோ இந்தியா உருவாக்கி இருக்கிறது.
முன்னதாக விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தன. சீன வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையின் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ X100 சீரிஸ் இந்திய வேரியண்ட்களிலும் இதே பிராசஸர் மற்றும் 8T LTPO டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 50MP 1 இன்ச் பிரைமரி கேமரா மற்றும் கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதற்காக வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆஸ்டிராய்டு பிளாக், ஸ்டார்டிரெயில் புளூ மற்றும் சன்செட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஃபன்டச் ஒ.எஸ். 14, செய்ஸ் பிரான்டு கேமராக்கள், IP68 சான்று கொண்டிருக்கும் என்று உறுதியாகி இருக்கிறது.
விவோ X100 சீரிஸ் அறிமுகமாகும் அதே நாளில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.