6000mAh பேட்டரி, 80W சார்ஜிங்... அசத்தல் அம்சங்களுடன் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
- விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
- ஸ்மார்ட்போன் 16 ஜிபி LPDDR5X ரேம், 1TB வரை UFS4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ் ஃபோல்ட் 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நேற்று சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 8.03 இன்ச் உள்புற பேனலைக் கொண்டுள்ளது. இரண்டு டிஸ்ப்ளேக்களும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன.
இந்த மொபைல் ஏற்கனவே விற்பனைக்கு கிடைக்கும் விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ மாடலை விட இலகுவானதாகவும், அளவில் மெலிதாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்திய விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டின் கேமரா சென்சார்கள்- இரண்டு 20MP செல்ஃபி கேமரா, மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதற்காக இந்த ஸ்மார்ட்போன் IPX8+IPX9+IPX9+ மற்றும் IP5X ரேட்டிங் பெற்றிருக்கிறது.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 சிறப்பம்சங்கள்:
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மாடல் 8.03-இன்ச் 8T LTPO டிஸ்ப்ளே, 6.53-இன்ச் 8T LTPO வெளிப்புற ஸ்கிரீன் கொண்டுள்ளது. இதில் உள்ள பேனல்கள் 120Hz ரிப்ரெஷ் ரேட், 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன. இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி LPDDR5X ரேம், 1TB வரை UFS4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓரிஜின் ஓஎஸ் 5 கொண்டுள்ளது. புகைப்படம் எடுக்க விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மாடலில் செய்ஸ் பிரான்டின்- 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, மற்றும் 20MP செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் ஐபோன், ஏர்போட்ஸ், மேக்புக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐக்ளவுட் உள்ளிட்ட ஆப்பிளின் சாதனங்களுடன் சீராக இயங்கும். பயனர்கள் தங்கள் தரவை தடையின்றி அணுக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்த சாதனங்கள் மற்றும் சேவைகளுடன் இணைக்க முடியும்.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மாடல் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 80W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 விலை விவரங்கள்:
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 12GB + 256GB மாடல் CNY 6,999 (தோராயமாக ரூ. 83,800) விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 12GB + 512GB மாடல் CNY 7,999 (தோராயமாக ரூ. 96,000) விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 16GB + 512GB மாடல் CNY 8,499 (தோராயமாக ரூ. 1,02,000)
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 16GB + 1TB மாடல் CNY 9,499 (தோராயமாக ரூ. 1,14,000)
புதிய எக்ஸ் ஃபோல்ட் 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Baibai (பச்சை), Quingsong (வெள்ளை) மற்றும் Titanium (கருப்பு) வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இது ஜூலை 2 முதல் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்லைன் வலைத்தளங்கள் வழியாக சீனாவில் விற்பனைக்கு கிடைக்கும்.