மொபைல்ஸ்

இணையத்தில் லீக் ஆன விவோ V27 விலை விவரங்கள்

Published On 2023-02-26 09:45 IST   |   Update On 2023-02-26 09:45:00 IST
  • விவோ நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய விவோ V சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.

விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் விவோ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அந்நிறுவன வலைத்தளத்தின் மூலம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அதன்படி விவோ V27 இந்தியாவில் மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதன் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களை அம்பலப்படுத்தும் V27 ப்ரோ டீசர் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், புதிய விவோ V27 ப்ரோ இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

 

புதிய விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் குறித்து 91arena வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளியான டீசர்களின் படி விவோ V27 ப்ரோ மாடலில் 3D வளைந்த டிஸ்ப்ளே, அல்ட்ரா ஸ்லிம் டிசைன், 7.4mm தடிமன் அளவு, 120Hz ரிப்ரெஷ் ரேட், நிறம் மாறும் கிளாஸ் பேக், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ரிங் எல்இடி ஃபிளாஷ், 50MP பிரைமரி கேமரா, OIS வசதி கொண்டிருக்கிறது.

புதிய விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மேஜிக் புளூ மற்றும் நோபில் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. முன்னதாக கீக்பென்ச் வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ V2230 மாடல் நம்பர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1003 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 3936 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. கீக்பென்ச் லிஸ்டிங்கின் படி விவோ V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News