மொபைல்ஸ்

அசத்தல் அம்சங்களுடன் கூடிய விவோ T1x ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

Published On 2022-07-28 05:18 GMT   |   Update On 2022-07-28 05:18 GMT
  • விவோ T1x ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது.
  • இதுதவிர 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது.

விவோ நிறுவனம் அதன் T1x ஸ்மார்ட்போனை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இது தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. 90.6 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசஸரை கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் ஆகியவை பின்பகுதியில் இடம்பெற்றுள்ளன. முன்பகுதியில் வீடியோ கால் மற்றும் செல்பி எடுப்பதற்கு ஏதுவாக 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.


ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதுதவிர 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிராவிட்டு பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய இருவித கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

விலையை பொறுத்தவரை விவோ T1x ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11 ஆயிரத்து 999 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12 ஆயிரத்து 999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் கிரெடிட் கார்டோ அல்லது டெபிட் கார்டோ பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News