மொபைல்ஸ்

இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ ஸ்பார்க் 10 யுனிவர்ஸ் - இத்தனை மாடல்களா?

Published On 2023-03-20 12:22 GMT   |   Update On 2023-03-20 12:22 GMT
  • டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
  • புதிய ஸ்மார்ட்போன் சீரிசில் ஸ்பார்க் 10 ப்ரோ மாடல் மட்டும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது டெக்னோ ஸ்பார்க் 10 யுனிவர்ஸ் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்பார்க் 10 யுனிவர்சில் ஸ்பார்க் 10 ப்ரோ, ஸ்பார்க் 10 5ஜி, ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சில மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஸ்பார்க் 10 யுனிவர்சில் ஸ்பார்க் 10 ப்ரோ முதலில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதற்கான டீசர்களில் ஸ்பார்க் 10 5ஜி மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஸ்பார்க் 10C தவிர மற்ற மாடல்களில் 50MP AI கேமரா, ASD மோட், 3D LUT தொழில்நுட்பம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மற்றும் ஸ்பார்க் 10 5ஜி மாடல்களில் ஸ்மார்ட் ஃபோக்கஸ் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. ஸ்பார்க் 10 சீரிசில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள்:

6.8 இன்ச் 1080x2400 பிக்சல் HD+ டாட்-இன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்

ARM மாலி-G52 2EEMC2 GPU

8 ஜிபி ரேம்

128 ஜிபி, 256 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 12.6

50MP பிரைமரி கேமரா

2MP டெப்த் கேமரா

ஏஐ லென்ஸ், டூயல் எல்இடி ஃபிளாஷ்

32MP செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

Tags:    

Similar News