மொபைல்ஸ்

சாம்சங் கேலக்ஸி S23 FE வெளியீட்டில் திடீர் திருப்பம்?

Update: 2023-03-13 04:07 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE வெளியீடு பற்றி தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  • சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23, S23 பிளஸ் மற்றும் S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது.

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சாம்சங், இந்த ஆண்டிற்கான ஃபிளாக்ஷிப் S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. சாம்சங் நிறுவன வழக்கப்படி இதே சீரிசில் கேலக்ஸி S23 FE மாடலும் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியானதோடு, ஆகஸ்ட் மாத வாக்கில் கேலக்ஸி S23 FE அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் S23 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யாது என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கேலக்ஸி S சீரிஸ் ஃபேன் எடிஷன் (FE) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாது என கூறப்படுகிறது. இந்த முறை கேலக்ஸி S23 FE அறிமுகம் செய்யப்படாது என்பதை தவிர வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. கேலக்ஸி S23 FE அறிமுகம் செய்யப்படவில்லை என்ற பட்சத்தில் இது ரத்து செய்யப்படுகிறதா அல்லது ஒத்திவைக்கப்படுகிறதா என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய S சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால், கேலக்ஸி S23 FE வெளியீடு ஒத்திவைக்கப்படும் வாய்ப்புகள் குறைவே. அந்த வகையில், கேலக்ஸி S23 FE இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட வேண்டும் அல்லது சந்தையில் அறிமுகம் செய்யப்படாமல் ரத்து செய்யப்பட வேண்டும்.

Tags:    

Similar News