மொபைல்ஸ்

குறைந்த விலை 5ஜி போன் - சத்தமின்றி அறிமுகம் செய்த சாம்சங்!

Update: 2022-08-08 05:01 GMT
  • சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A23 ஸ்மார்ட்போனினை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
  • இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருப்பதாக பல முறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் வெளியான தகவல்களிலும் கேலக்ஸி A23 5ஜி மாடல் விவரங்கள் லீக் ஆகின. இதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A23 5ஜி மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிட்டு இருக்கிறது.

இதன் மூலம் புதிய சாம்சங் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டன. எனினும், இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய கேலக்ஸி A23 5ஜி மாடலின் அம்சங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆன விவரங்களை உண்மையாக்கும் வகையிலேயே உள்ளது.


சாம்சங் கேலக்ஸி A23 5ஜி அம்சங்கள்:

- 6.6 இன்ச் FHD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

- 4/6/8 ஜிபி ரேம்

- 64/128 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 50MP பிரைமரி கேமரா

- 5MP அல்ட்ரா வைடு கேமரா

- 2MP டெப்த் கேமரா

- 2MP மேக்ரோ லென்ஸ்

- 8MP செல்பி கேமரா

- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4.1

- 5000 எம்ஏஹெச் பேட்டரி

Tags:    

Similar News