மொபைல்ஸ்

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4, Z ப்ளிப் 4 புக்கிங் - ஆகஸ்ட் 16 ரெடியா இருங்க!

Published On 2022-08-12 05:00 GMT   |   Update On 2022-08-12 05:00 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன்களின் இந்திய முன்பதிவு விவரம் வெளியாகி உள்ளது.
  • இதன் விலை விவரங்களும் அதே தேதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் புதிய கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. தற்போது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய முன்பதிவு விவரங்களை சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அதன்படி சாம்சங் வலைதளத்தில் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு ஆகஸ்ட் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இதே நாளில் இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


முன்பதிவு சலுகை விவரங்கள்:

- சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் மாடல்களை நேரலை காமர்ஸ் நிகழ்வில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 40 ஆயிரத்திற்கும் அதிக மதிப்புள்ள பலன்களை பெற முடியும்.

- கூடுதலாக முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரத்து 199 மதிப்புள்ள பிரத்யேக பரிசு வழங்கப்படுகிறது.

- லைவ் காமர்ஸ் நிகழ்வின் அங்கமாக சாம்சங் லைவ் விற்பனையில் கேலக்ஸி Z ப்ளிப் 4 பிஸ்போக் எடிஷன் மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கிடைக்கும்.

- கேலக்ஸி Z ப்ளிப் 4 பிஸ்போக் எடிஷனை முன்பதிவு செய்யும் போது, வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள க்ளியர் கவர் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகளை பெற முடியும்.

முன்பதிவு நிகழ்வு சாம்சங் வலைதளத்தில் நேரலை செய்யப்பட இருக்கிறது. லைவ் காமர்ஸ் நிகழ்வின் சிறப்பு சலுகைகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

Tags:    

Similar News