மொபைல்ஸ்

சாம்சங் புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிப்பு

Published On 2022-08-16 09:47 GMT   |   Update On 2022-08-16 09:47 GMT
  • சாம்சங் நிறுவனம் இந்த மாத துவக்கத்தில் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
  • இன்று இரு மாடல்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த வாரம் அறிமுகம் செய்து இருந்தது. எனினும், இவற்றின் விலை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இரு போல்டபில் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் Z போல்டு 4 போல்டபில் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் படி கேலக்ஸி Z ப்ளிப் 4 விலை ரூ. 89 ஆயிரத்து 999 என துவங்குகிறது. கேலக்ஸி Z போல்டு 4 விலை ரூ. 1 லடசத்து 54 ஆயிரத்து 999 என துவங்குகிறது.


விலை விவரங்கள்:

கேலக்ஸி Z ப்ளிப் 4 (8ஜிபி+128ஜிபி) ரூ. 89 ஆயிரத்து 999

கேலக்ஸி Z ப்ளிப் 4 (8ஜிபி+256ஜிபி) ரூ. 94 ஆயிரத்து 999

கேலக்ஸி Z ப்ளிப் 4 (8ஜிபி+256ஜிபி) பிஸ்போக் எடிஷன் ரூ. 97 ஆயிரத்து 999

கேலக்ஸி Z போல்டு 4 (12ஜிபி+ 256ஜிபி) ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999

கேலக்ஸி Z போல்டு 4 (12ஜிபி+ 512ஜிபி) ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 999

கேலக்ஸி Z போல்டு 4 (12ஜிபி+ 1டிபி) ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 999

முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி Z ப்ளிப் 3 மாடலின் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி Z போல்டு 3 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 999 என துவங்கியது. இந்திய ரூபாய்க்கான அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சிக்கல் போன்ற காரணங்களால் இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

புதிய கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன்களை இன்று மற்றும் நாளை (ஆகஸ்ட் 17) இரவுக்குள் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News