மொபைல்ஸ்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி S23 சீரிஸ் அம்சங்கள்

Published On 2023-01-18 11:23 GMT   |   Update On 2023-01-18 11:23 GMT
  • சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புது ஸ்மார்ட்போன்களின் சர்வதேச வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் அம்சங்கள் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S23 மற்றும் S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முழு அம்சங்கள் வெளியாகி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த வின்ஃபியுச்சர் வலைதளத்தில் புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது புது ஸ்மார்ட்போன் டிசைன் இடம்பெற்று இருக்கிறது.

அதன்படி புது ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே அளவுகளில் அதிக மாற்றம் இருக்காது என தெரிகிறது. எனினும், கேலக்ஸி S23 மாடலில் அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் AMOLED இன்ஃபினிட்டி O ஃபிளாட் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அனைத்து சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

இதன் பிரைமரி கேமரா அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது. இதன் முன்புறம் 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் முறையே 3900 எம்ஏஹெச் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 2000 எம்ஏஹெச் பேட்டரி பூஸ்ட் வழங்கப்படுகிறது.

சார்ஜிங்கை பொருத்தவரை கேலக்ஸி S23 மாடலில் 25 வாட் சார்ஜிங், S23 பிளஸ் மாடலில் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், Qi வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி S23 மற்றும் S23 பிளஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

6.1 இன்ச் (S23) / 6.6 இன்ச் (S23 பிளஸ்) 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி O டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

அட்ரினோ 740 GPU

8 ஜிபி LPDDR5X ரேம்

128 ஜிபி, 256 ஜிபி UFS 4.0 மெமரி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5.1

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ், OIS

12MP அல்ட்ரா வைடு சென்சார்

10MP டெலிபோட்டோ லென்ஸ்

12MP செல்ஃபி கேமரா

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6இ, ப்ளூடூத் 5.3

3900 எம்ஏஹெச் பேட்டரி (S23), 25 வாட் சார்ஜிங்

4700 எம்ஏஹெச் பேட்டரி (S23 பிளஸ்), 45 வாட் சார்ஜிங்

Qi வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்

Photo Courtesy: Winfuture

Tags:    

Similar News