மொபைல்ஸ்

இந்தியாவில் கேலக்ஸி S22 விலையை குறைத்த சாம்சங்

Update: 2023-02-03 07:18 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ. 72 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
  • கேலக்ஸி S22 புதிய விலை விவரங்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விட்டது. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் இந்திய விலை ரூ. 74 ஆயிரத்து 999 என துவங்குகிறது. புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் டிசைன் பெருமளவில் மாற்றH்படவில்லை. எனினும், இவற்றின் ஹார்டுவேர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய கேலக்ஸி S23 அறிவிப்பை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது முந்தைய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S22 விலையை சத்தமின்றி குறைத்து இருக்கிறது. முன்னதாக ரூ. 72 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S22 தற்போது சற்றே குறைந்த விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்டில் மாற்றப்பட்டு விட்டது.

சாம்சங் கேலக்ஸி S22 புதிய விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதே போன்று 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 76 ஆயிரத்து 999 ஆக இருந்தது. தற்போது கேலக்ஸி S22 இரு வேரியண்ட்களின் விலையும் முறையே ரூ. 57 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி S22 விலை ரூ. 57 ஆயிரத்து 999 என மாறி இருக்கும் நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ. 52 ஆயிரத்து 999 என பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S22 அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S22 மாடலில் 6.1 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா, ஆப்டிக்கல் ஜூம் வசதி, 12MP செல்ஃபி கேமரா உள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News