மொபைல்ஸ்

அதே பிராசஸர், ஆனால் போன் வேற.. வசமாக சிக்கிய சாம்சங்..!

Published On 2023-07-29 12:41 IST   |   Update On 2023-07-29 12:41:00 IST
  • மிட் ரேன்ஜ் M சீரிஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸரை சாம்சங் வழங்குவது இதுவே முதல் முறை.
  • 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S21 சீரிசில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M44 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் லிஸ்டிங்கில் வெளியாகி உள்ளது. அதில் புதிய கேலக்ஸி M44 ஸ்மார்ட்போன் SM-M446K எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக சாம்சங் கேலக்ஸி M33 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1280 சிப்செட் உடன் கொரிய சந்தையில் ஜம்ப் 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் SM-M446K எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதால், இந்த மாடல் ஜம்ப் 3 எனும் பெயரில் கொரியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

 

இந்திய சந்தையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி M34 ஸ்மார்ட்போனும் எக்சைனோஸ் 1280 பிராசஸர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எக்சைனோஸ்-இல் இருந்து ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருக்கு மாறுவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S21 சீரிசில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மிட் ரேன்ஜ் M சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர்களை சாம்சங் வழங்குவது இதுவே முதல் முறை ஆகும். சாம்சங் கேலக்ஸி M33 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், புதிய கேலக்ஸி M44 மாடல் கொரியா தவிர மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags:    

Similar News