6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1330 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய M14 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி M14 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் எக்சைனோஸ் 1330 பிராசஸர், மாலி G68 MP2 GPU, 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி M14 5ஜி அம்சங்கள்:
6.6 இன்ச் FHD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
எக்சைனோஸ் 1330 பிராசஸர்
மாலி G68 MP2 GPU
4ஜிபி ரேம்
64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார்
2MP மேக்ரோ லென்ஸ்
13MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, 4ஜி, டூயல் பேண்ட் வைபை
ப்ளூடூத், என்எஃப்சி, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப் சி போர்ட்
6000 எம்ஏஹெச் பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 490 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை அமேசான், சாம்சங் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.