மொபைல்ஸ்

மிரட்டலான ஏஐ அம்சங்களுடன் வெளியீட்டுக்கு ரெடியாகும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2025-07-15 11:58 IST   |   Update On 2025-07-15 11:58:00 IST
  • ஸ்மார்ட்போன் சமீபத்தில் கூகுள் பிளே கன்சோல் தரவுத்தளத்திலும் காணப்பட்டது.
  • கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி கேமராவை வைக்க ஒரு ஐ-டிராப் நாட்ச் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் எக்சைனோஸ் 1380 பிராசஸர், 5,000mAh பேட்டரி கொண்ட கூடிய கேலக்ஸி M36 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஒரு விளம்பர வலைப்பக்கம் இந்த ஸ்மார்ட்போனிற்காக உருவாக்கப்பட்டு இருப்பது, இதன் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் கூகுள் பிளே கன்சோல் தரவுத்தளத்திலும் காணப்பட்டது. இதில் அதன் வடிவமைப்பு மற்றும் சில ஹார்டுவேர் அம்சங்கள் வழங்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் பேனர் விளம்பரத்தில் சாம்சங் கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள நுகர்வோர் இ-காமர்ஸ் தளத்தின் வலைத்தளம் வழியாக சாம்சங்கின் அடுத்த F-சீரிஸ் ஸ்மார்ட்போனைப் பெற முடியும்.

தற்போது ஸ்மார்ட்போன் வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி, அதன் அசங்கள் மற்றும் இதர விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கேலக்ஸி F36 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

புதிய சாம்சங் கேலக்ஸி F-சீரிஸ் ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் வரக்கூடும். கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போனிற்கான பேனர் விளம்பரத்தில் "Flex HI-FAI" என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது, அதில் AI எழுத்துக்கள் வேறு நிறத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளன. இடது பக்கத்தில் சிம் கார்டு ஸ்லாட் உடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என்பதையும் பேனர் காட்டுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒப்பீட்டளவில் மெல்லிய வடிவமைப்பு, செங்குத்தாக சீரமைக்கப்பட்ட பின்புற கேமரா பம்ப் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

சமீபத்தில், சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் F-சீரிஸ் ஸ்மார்ட்போனும் கூகுள் பிளே கன்சோல் தரவுத்தளத்தில் காணப்பட்டது. இது ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களைக் காட்டியது. கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி கேமராவை வைக்க ஒரு ஐ-டிராப் நாட்ச் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தப் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி F36 ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் 6 ஜிபி ரேமுடன் இணைக்கப்பட்ட எக்சைனோஸ் 1380 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ரய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 உடன் இயங்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News