விரைவில் இந்தியா வரும் சாம்சங் A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
- சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்.
- சமீபத்தில் சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.
சாம்சங் நிறுவனம் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி A சீரிசில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி A54 மற்றும் கேலக்ஸி A34 5ஜி ஸ்மார்ட்போன்கள் மார்ச் 15 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. டிப்ஸ்டர் தெபாயன் ராய் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி A54 மற்றும் கேலக்ஸி A34 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.
கேலக்ஸி A54 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
புதிய சாம்சங் கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் sAMOLED FHD டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், சாம்சங் எக்சைனோஸ் 1380 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், 3.5mm ஹெட்போன் ஜாக், ஒன் யுஐ 5.0, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி A34 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி A34 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ sAMOLED 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.0, IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.