மொபைல்ஸ்

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி A54 5ஜி

Update: 2022-11-16 04:12 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • புது சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஜிட்டல் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3C தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சாம்சங்கின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக புதிய கேலக்ஸி A54 5ஜி மாடலின் டிஜிட்டல் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவற்றை 91 மொபைல்ஸ் ஆன்லீக்ஸ் உடன் இணைந்து வெளியிட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A53 5ஜி மாடலுக்கு மாற்றாக புதிய கேலக்ஸி A54 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை புதிய கேலக்ஸி A54 5ஜி மாடல் 158.3x76.7x8.2mm அளவில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இது தற்போதைய கேலக்ஸி A53 5ஜி மாடலை விட அளவில் சற்று சிறியதாகவும், அகலமாகவும் இருக்கிறது.

எனினும், கேலக்ஸி A54 5ஜி மாடலின் பின்புறம் முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஃபிளாட் பேக் பேனல், மூன்று கேமரா சென்சார்கள் வட்ட வடிவம் கொண்டுள்ளன. இத்துடன் எட்ஜ்கள் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது வளைந்து காணப்படுகின்றன. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கின்றன. மைக்ரோபோன், ஸ்பீக்கர் கிரில், யுஎஸ்பி டைப் சி கீழ்புறத்திலும், சிம் டிரே, இரண்டாவது மைக்ரோபோன் மேல்புறத்தில் உள்ளன.

ஸ்மார்ட்போனின் முகப்பில் பன்ச் ஹோல் ரக கட்-அவுட், 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கேலக்ஸி A53 5ஜி மாடலில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. டிசைனை பொருத்தவரை கேலக்ஸி A54 5ஜி மாடல் தோற்றத்தில் கிட்டத்தட்ட கேலக்ஸி S23 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் உற்பத்தி தரம் கேலக்ஸி S23 மாடலை விட அதிகளவு வேறுபடும்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி A54 5ஜி மாடலில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மூன்று கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 வழங்கப்படும் என தெரிகிறது. புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Photo Courtesy: 91mobiles

Tags:    

Similar News