மொபைல்ஸ்

50MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்

Update: 2023-05-23 06:09 GMT
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் கேலக்ஸி A14 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A14 4ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி மாடல் வெளியிடப்பட்டதை அடுத்து, புதிய கேலக்ஸி A14 4ஜி வெர்ஷன் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.6 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், இன்ஃபினிட்டி வி நாட்ச், 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் எக்சைனோஸ் 850 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5 ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி A14 4ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி A14 4ஜி அம்சங்கள்:

6.6 இன்ச் FHD+ 2408x1080 பிக்சல் இன்ஃபினிட்டி வி LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்

எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்

மாலி G52

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா

5MP அல்ட்ரா வைடு கேமரா

2MP சென்சார்

13MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

15 வாட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி A14 4ஜி மாடல் லைட் கிரீன், பிளாக் மற்றும் சில்வர் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் விற்பனை சாம்சங் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளம், இதர முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது. புதிய கேலக்ஸி A14 4ஜி மாடல் வாங்கும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News