- முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெர்ஷன் அம்சங்கள் ஏற்கனவே அறிந்ததே.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A14 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சாம்சங்கின் பட்ஜெட் விலை கேலக்ஸி A சீரிஸ் மாடல் ஆகும். புதிய கேலக்ஸி A14 பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெர்ஷன் அம்சங்கள் ஏற்கனவே அறிந்தது தான். இந்த மாடலில் 6.6 இன்ச் 1080x2408 பிக்சல் PLS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என்று இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 13 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளன.
சாம்சங் கேலக்ஸி A14 அம்சங்கள்:
மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A14 மாடலில் 6.6 இன்ச் 1080x2408 பிக்சல் PLS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.0 ஒஎஸ் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் கேமரா, 13MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.