விரைவில் இந்தியா வரும் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
- புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போனினை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது புதிய சாம்சங் கலேகஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை சாம்சங் வெளியிட்டு உள்ளது. டீசரில் புது ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் தெரியவந்துள்ளது. எனினும், இவற்றின் பெயர் விவரங்களை சாம்சங் இதுவரை அறிவிக்கவில்லை.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புது ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி A34 5ஜி மற்றும் கேலக்ஸி A54 5ஜி பெயர்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இரு மாடல்களும் சமீபத்தில் கீக்பென்ச் மற்றும் ப்ளூடூத் SIG வலைதளங்களில் லீக் ஆகி இருந்தன. சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் மைக்ரோசைட் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது.
புது ஸ்மார்ட்போன்கள் ஆசம் பிளாக், ஆசம் பர்கண்டி மற்றும் ஆசம் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும். இத்துடன் 6.6 இன்ச் FHD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் ரக நாட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி, மூன்று கேமரா சென்சார்கள், OIS, அதிவேக 5ஜி பிராசஸர், 8 ஜிபி வரை ரேம், சாம்சங் ஒன் யுஐ, லாக் ஸ்கிரீன் பெர்சனலைசேஷன், ஸ்ப்லிட் ஸ்கிரீன், குயிக் ஷேர் மற்றும் பிரைவசி டேஷ்போர்டு வழங்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் PLS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜி வசதி கொண்டிருக்கிறது.