மொபைல்ஸ்

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 18 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த சாம்சங்

Update: 2023-03-11 04:30 GMT
  • சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • கேலக்ஸி S23 ஃபிளாக்ஷிப் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் இந்தியா நிறுவனம் தனது சமீபத்திய ஃபிளாக்ஷிப்: கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான ஒரே மாதத்தில் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 200MP பிரைமரி கேமரா, டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் மற்றும் பல்வேறு டாப் எண்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

சலுகை விவரங்கள்:

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இத்துடன் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனை பயனர்கள் மாதம் ரூ. 5 ஆயிரத்து 209 விலையில் வாங்கிட (24 மாதங்கள்) முடியும். இத்துடன் அப்கிரேடு போனஸ் ரூ. 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

 

இதேபோன்று கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலகஸி S23 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்கள், 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்களை மாதம் ரூ. 3 ஆயிரத்து 125 கட்டணத்தில் வாங்கிட முடியும். இவற்றுக்கு ரூ. 8 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.

இவைதவிர பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 47 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ், ரூ. 8 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்க்கும் பட்சத்தில் கேலக்ஸி S23 அல்ட்ரா விலை ரூ. 59 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும். இந்த சலுகைகள் சாம்சங் வலைத்தளம் மற்றும் சாம்சங் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News