மொபைல்ஸ்

ரெட்மி A2 சீரிஸ் புதிய மெமரி வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்!

Published On 2023-06-27 13:54 IST   |   Update On 2023-06-27 13:54:00 IST
  • ரெட்மி A2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் உள்ளது.
  • புகைப்படங்களை எடுக்க டூயல் 13MP பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சியோமி நிறுவனம் கடந்த மாதம் ரெட்மி A2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி A2 மற்றும் A2 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 6 ஆயிரத்து 799 மற்றும் ரூ. 8 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரெட்மி A2 மற்றும் A2 பிளஸ் மாடல்களில் 6.52 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, HD+ 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது.

 

புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, QCGA லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இரு மாடல்களிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி A2 சீரிஸ் மாடல்கள் சீ கிரீன், அக்வா புளூ மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் டிஸ்ப்ளே, ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் பாடி உள்ளது.

Tags:    

Similar News