மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு வரும் ரெட்மி 12 - புது டீசர் வெளியானது!
- சியோமி நிறுவனத்தின் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- இந்தியாவில் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
சியோமி நிறுவனம் ஆகஸ்ட் 1-ம் தேதி புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி, பல்வேறு டீசர்களை சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு விவரங்கள் டீசர் வடிவில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரெட்மி 12 ஸ்மார்ட்போன் பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மூன்ஸ்டோன் சில்வர் நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தது.
புதிய நிறங்கள் மட்டுமின்றி ரெட்மி 12 ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் கிலாஸ் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஏற்கனவே தாய்லாந்து மற்றும் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஏற்கனவே அம்பலமான ஒன்று தான். எனினும், இதே அம்சங்கள் அதன் இந்திய வேரியன்டிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 4ஜிபி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.