மொபைல்ஸ்
null

பட்ஜெட் விலையில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2024-04-17 11:23 GMT   |   Update On 2024-04-17 11:27 GMT
  • அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
  • டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த மாதம் நார்சோ 70 ப்ரோ 5ஜி மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது நார்சோ 70x 5ஜி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ரியல்மி ஈடுபட்டு வருகிறது.

ரியல்மி நார்சோ 70x 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி அமேசான் தளத்தில் மைக்ரோசைட் இடம்பெற்றுள்ளது. அதில் ரியல்மி நார்சோ 70x 5ஜி மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 


புதிய ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது. ரியல்மி நார்சோ 70x 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் ரியல்மி நார்சோ 70x ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் FHD+ IPS LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், மாலி G57 MC2 GPU, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். வழங்கப்படும் என்று கூறப்பட்டது. 

Tags:    

Similar News