ரியல்மி நார்சோ 60 சீரிஸ் 5ஜி இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு!
- புதிய நார்சோ ஸ்மார்ட்போன்களிலும் மேட்ரிக்ஸ் கேமரா செட்டப் உள்ளது.
- நார்சோ 60 சீரிஸ் 5ஜி மாடலில் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படலாம்.
ரியல்மி நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து ரியல்மி நார்சோ 60 சீரிஸ் 5ஜி மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி ஜூலை 6-ம் தேதி நார்சோ 60 5ஜி மற்றும் நார்சோ 60 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. டீசர்களில் புதிய ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் எப்படி காட்சியளிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி புதிய நார்சோ 60 சீரிஸ் 5ஜி மாடல்களின் பின்புற தோற்றம் ரியல்மி 11 ப்ரோ சீரிசில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய நார்சோ ஸ்மார்ட்போன்களிலும் மேட்ரிக்ஸ் கேமரா செட்டப் உள்ளது. டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் 100MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் பின்புறம் வேகன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பேக் பேனல் மார்ஷியன் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே வெளியான டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் 61 டிகிரி வளைந்த டிஸ்ப்ளே, மத்தியில் பன்ச் ஹோல் கொண்டிருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. இத்துடன் அதிகபட்சம் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரியல்மி நார்சோ 60 5ஜி மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.
அதில் புதிய நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போன் RMX3750 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதும், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், 8 ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மற்ற நார்சோ போன்களை போன்றே நார்சோ 60 சீரிஸ் 5ஜி மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆன்லைன் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.