மொபைல்ஸ்

ரூ. 6,000 தள்ளுபடியுடன் முன்கூட்டியே விற்பனைக்கு கிடைக்கும் ரியல்மி GT 6T

Published On 2024-05-27 11:03 GMT   |   Update On 2024-05-27 11:03 GMT
  • ஸ்மார்ட்போனின் விற்பனை மே 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
  • விற்பனை ரியல்மி, அமேசான் இந்தியா வலைதளங்களில் நடைபெறவுள்ளது.

ரியல்மி நிறுவனம் தனது GT 6T ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மே 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

இந்த நிலையில், புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்காக நாளை (மே 28) Early Access முறையில் ரியல்மி GT 6T மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. அந்த வகையில், ரியல்மி GT 6T மாடலின் சிறப்பு விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. விற்பனை ரியல்மி மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் நடைபெற உள்ளது.

 


விலை விவரங்கள்:

ரியல்மி GT 6T 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 30 ஆயிரத்து 999

ரியல்மி GT 6T 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 32 ஆயிரத்து 999

ரியல்மி GT 6T 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 35 ஆயிரத்து 999

ரியல்மி GT 6T 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி ரூ. 39 ஆயிரத்து 999

புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன்களை சேர்க்கும் போது ரூ. 6 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும்.

ரியல்மி GT 6T மாடலில் 6.78 இன்ச் 1.5K 8T LTPO AMOLED ஸ்கிரீன் கொண்ட ப்ரோ XDR டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 9-லேயர் கூலிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 129 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News