null
மிகக் குறைந்த விலையில் 108MP கேமரா ஸ்மார்ட்போன்.. ரியல்மி வெளியிட்ட சூப்பர் டீசர்!
- ரியல்மி C53 ஸ்மார்ட்போன் பின்புற கேமரா மாட்யுல், கோல்டு நிற ஆப்ஷன் கொண்டிருக்கிறது.
- ரியல்மி C53 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப், எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது C53 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் C சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய ரியல்மி C53 தோற்றத்தில், அதன் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது.
புதிய ரியல்மி C53 டீசரில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா மாட்யுல், கோல்டு நிற ஆப்ஷன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பிரிவில் 108MP கேமரா வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்திய சந்தையில் ரியல்மி C53 ஸ்மார்ட்போன் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. ரியல்மி C53 வெளியீட்டை ஒட்டி புதிய மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்களின் டீசர் இடம்பெற்று இருக்கிறது.
கேமரா மாட்யுல், நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போன் பாக்சி சேசிஸ் கொண்டிருக்கிறது. இதன் வால்யும் ராக்கர், பவர் பட்டனில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதன் சிம் டிரே இடது புறத்தில் உள்ளது. ரியல்மி C53 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப், எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது.
இதன் முன்புறம் வாட்டர் டிராப் நாட்ச், சற்றே மெல்லிய பெசல்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில், மைக்ரோபோன் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் கீழ்புறமாக வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.