மொபைல்ஸ்

5 நாட்களில் 2 லட்சம் யூனிட்கள் - விற்பனையில் புது சாதனை படைத்த ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2023-06-21 13:30 IST   |   Update On 2023-06-21 13:30:00 IST
  • முதல் நாள் விற்பனையில் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.
  • ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 27 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.

ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன் இதன் விற்பனை துவங்கிய நிலையில், முதல் நாளிலேயே 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல்மி அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், விற்பனை துவங்கிய முதல் ஐந்து நாட்களில் ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. அறிமுகமானதில் இருந்தே ரியல்மி 11 சீரிஸ் மாடல்கள் அதிக பிரபலம் அடைந்து வருகிறது.

 

இதன் காரணமாக ரியல்மி ஏற்கனவே படைத்த சாதனங்களை அந்நிறுவனம் தற்போது முறியடித்து வருகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தவிர அனைத்து அம்சங்களும் ரியல்மி 11 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி 11 ப்ரோ மாடலின் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனையும் ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News