மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் போக்கோ X6 சீரிஸ் - அசத்தல் டீசர் வெளியீடு

Published On 2023-12-28 09:39 GMT   |   Update On 2023-12-28 09:39 GMT
  • டீசரில் "தி அல்டிமேட் பிரிடேட்டர்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
  • இதே பிராசஸர் ரெட்மி K70E மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

போக்கோ நிறுவனம் தனது போக்கோ X6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசர்களில் "தி அல்டிமேட் பிரிடேட்டர்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

டீசருடன் போக்கோ வெளியிட்டுள்ள வீடியோவில் போக்கோ விளம்பர தூதர் ஹர்திக் பான்டியா இடம்பெற்று இருக்கிறார். டீசர் வீடியோவில் வேட்டை துவங்குகிறது என்பதை குறிக்கும் காட்சிகள் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர வேறு தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

 


எனினும், மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக போக்கோ X6 சீரிஸ் இருக்கும் என்று போக்கோ உறுதிப்படுத்தி இருக்கிறது. இதே பிராசஸர் ரெட்மி K70E மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் போக்கோ பிரான்டிங்கில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K70E மாடலில் 6.67 இன்ச் 1.5K OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி, கிளாஸ் பேக், பிளாஸ்டிக் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

இத்துடன் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News