மொபைல்ஸ்

போக்கோ M6 ப்ரோ இந்திய விலை இவ்வளவு தானா? லீக் ஆன சூப்பர் தகவல்..!

Published On 2023-08-03 15:53 GMT   |   Update On 2023-08-03 15:53 GMT
  • போக்கோ பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.
  • போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது.

போக்கோ நிறுவனத்தின் புதிய M6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. புதிய போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றிய விவரங்களை அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

இந்த நிலையில், போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலின் விலை, டிசைன் ரென்டர்கள், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் சியான் நிறத்தில் கிடைக்கும் என்றும் இரட்டை கேமரா சென்சார் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இத்துடன் செவ்வக வடிவம் கொண்ட கேமரா பம்ப் மற்றும் போக்கோ பிரான்டிங் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன் வழங்கப்படுகிறது.

லீக் ஆன விலை விவரங்கள்:

போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடல் மொத்தத்தில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 14 ஆயிரத்து 999, ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News