மொபைல்ஸ்

இந்தியாவின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் - எவ்வளவு தெரியுமா?

Published On 2024-03-08 11:54 GMT   |   Update On 2024-03-08 11:54 GMT
  • இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்பட்டது.
  • புதிய ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி மற்றும் மூன்று நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் சிறப்பு சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் போக்கோ C51 ஸ்மார்ட்போன் ஏர்டெல் பிரத்யேக எடிஷனாக ரூ. 5 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்பட்டது.

 


தற்போது போக்கோ அறிவித்து இருக்கும் போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போனின் ஏர்டெல் எடிஷன் மாடல் மார்ச் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் சேவையை பயன்படுத்தாதவர்களுக்கு சிம் கார்டு வீட்டிலேயே டெலிவரி செய்யும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ M6 5ஜி மாடலில் 6.74 இன்ச் HD+ 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், மாலி G57 MC2 GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்டிக் பிளாக், ஒரியன் புளூ மற்றும் போலாரிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

புதிய போக்கோ M6 5ஜி ஏர்டெல் எடிஷனின் விலை ரூ. 8 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. 

Tags:    

Similar News