மொபைல்ஸ்

அந்த பிரசாஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் - போக்கோ அசத்தல்

Published On 2024-05-23 12:44 GMT   |   Update On 2024-05-23 12:44 GMT
  • முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை புதிய போக்கோ F6 பெற்றது.
  • இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது.

போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய F6 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்கோ F6 5ஜி மாடலில் 6.67 இன்ச் 1.5K Crystal ResFlow 120Hz AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை புதிய போக்கோ F6 5ஜி பெற்றுள்ளது.

இத்துடன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஓ.எஸ். அப்டேட்களும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக சியோமி தெரிவித்து இருக்கிறது.

 


புகைப்படங்களை எடுக்க டூயல் 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 90 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

போக்கோ F6 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை மே 29 ஆம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது.

Tags:    

Similar News