மொபைல்ஸ்

108MP கேமரா கொண்ட ஒப்போ ரெனோ8 T 5ஜி இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-02-03 11:36 GMT   |   Update On 2023-02-03 11:36 GMT
  • ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
  • புகைப்படங்களை எடுக்க ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.7 இன்ச் AMOLED 3D கர்வ்டு ஸ்கிரீன், 120HZ ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 8 ஜிபி ரேம், ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர்ஒஎஸ் 13 போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மைக்ரோஸ்கோப் கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பேக் கவரில் உள்ள ஒப்போ க்ளோ டிசைனில் முக்கோன வடிவ க்ரிஸ்டல்கள், 7.7mm அளவில், 171 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதில் 4800 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஒப்போ ரெனோ8 T 5ஜி அம்சங்கள்:

6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

அட்ரினோ 619L GPU

8 ஜிபி ரேம்

128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர்ஒஎஸ் 13

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

108MP பிரைமரி கேமரா

2MP டெப்த் கேமரா

2MP மைக்ரோஸ்கோப் கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி

4800 எம்ஏஹெச் பேட்டரி

67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒப்போ ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் கோல்டு என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 10 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஸ்டோரில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News