மொபைல்ஸ்

ஒப்போ ரெனோ 8 சீரிஸின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Update: 2022-07-02 11:45 GMT
  • ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என கூறப்பட்டு வந்தது.
  • ஆனால் தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்டில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.62 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ மாடல் ஸ்நாப்டிராகன் 7 Gen 1 புராசஸரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதர விவரங்கள் அடுத்தடுத்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News