மொபைல்ஸ்

ஒன்பிளஸ் ஒபன் ஃபோல்டபில் மாடல் - இணையத்தில் லீக் ஆன வெளியீட்டு விவரம்

Published On 2023-07-15 06:50 IST   |   Update On 2023-07-15 06:50:00 IST
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது.
  • ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தகவல்.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

பிரபல டிப்ஸ்டரான மேக்ஸ் ஜம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த பெயரில் அறிமுகமாகும் பட்சத்தில், குறைந்தபட்சம் பெயரளவில் இது வித்தியாசமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும்.

 

இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள், ஹேசில்பிலாடு டியூனிங், ஃபிளாஷ், பக்கவாட்டில் கேரேகை சென்சார், பன்ச் ஹோல் கேமரா கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் ஒபன் அறிமுக நிகழ்வு நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. சாம்சங் தனது கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடல் ஜூலை 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News