ஒன்பிளஸ் நார்ட் 2T - கோப்புப்படம்
டிமென்சிட்டி 9000 பிராசஸருடன் உருவாகும் ஒன்பிளஸ் நார்ட் 3 - இணையத்தில் லீக் தகவல்
- ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் பிராண்டிங்கில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.
- நார்ட் பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தகவல்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்ட் 2 ஸ்மார்ட்போனினை 2021 வாக்கில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நார்ட் 2T கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நார்ட் 3 ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் ஒன்பிளஸ் நார்ட் 3 மாடலில் 150வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், டிமென்சிட்டி 8100 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 9000 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக ஒன்பிளஸ் அறிமுகம் செய்த நார்ட் 2T மாடலில் டிமென்சிட்டி 1300 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. @OnLeaks வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நார்ட் 3 ஸ்மார்ட்போன் 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்ட் 2 - கோப்புப்படம்
ஒன்பிளஸ் நார்ட் 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.72 இன்ச் FHD+ ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் டிமென்சிட்டி 9000 பிராசஸர்
மாலி G710 10-கோர் GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.