மொபைல்ஸ்

கோப்புப்படம்

ஒன்பிளஸ் வலைதளத்தில் லீக் ஆன நார்டு 3 - இந்திய வெளியீடு உறுதியானது!

Update: 2023-05-13 17:11 GMT
  • ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நார்டு 3 பெயர் இடம்பெற்று இருக்கிறது.
  • புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று தகவல்.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் பெயரை ஒன்பிளஸ் வலைதள சோர்ஸ் கோடில் பார்த்ததாக தெரிவித்து இருக்கிறார். புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

 

சமீபத்தில் தான், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி நார்டு 3 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். அம்சங்களை பொருத்தவரை புதிய நார்டு 3 மாடலில் 6.7 இன்ச் Full HD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 50MP சோனி IMX766 பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது லென்ஸ், 2MP டெரிடரி சென்சார் என மூன்று கேமரா லென்ஸ்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் அல்லது 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News