மொபைல்ஸ்

சார்ஜ் நின்னு பேசும்... அதிரடி ஆட்டத்திற்கு ரெடியாகும் ஒன்பிளஸ்..!

Published On 2025-10-07 14:08 IST   |   Update On 2025-10-07 14:08:00 IST
  • ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சீன சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

விற்பனையில் சிறந்து விளங்கிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மாடல்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனுடன், இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதுபற்றி ஒன்பிளஸ் தரப்பில் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.

ஒன்பிளஸ் 15 பேட்டரி விவரங்கள்:

டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களின் படி , ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி வழங்கப்படும். இத்துடன் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்குமா, இல்லையா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

பேட்டரியைத் தவிர, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பிற அம்சங்களையும் டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். அதில் இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

ஒன்பிளஸ் போனில் உள்ள மிகப்பெரிய பேட்டரியைத் தவிர, இது முந்தைய தலைமுறைகளின் 120Hz பேனல்களிலிருந்து 165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே தொழில்நுட்பம் போன்களில் கேம்களை விளையாடும்போது அதிக ஃபிரேம் வீதங்களை ஆதரிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16 உடன் வரும் என்றும், மற்ற சந்தைகளில் ஆக்சிஜன் ஓஎஸ் 16 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News