மொபைல்ஸ்

சக்திவாய்ந்த சிப்செட், 7,000mAh பேட்டரி... வெளியீட்டுக்கு ரெடியான ஒன்பிளஸ் 15

Published On 2025-10-17 15:08 IST   |   Update On 2025-10-17 15:08:00 IST
  • மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
  • ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத இறுதியில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது.

ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதி

சீனாவின் வெய்போ தள பதிவில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) அறிமுகம் செய்யப்படும் என்று கூறியது.

இது ஒன்பிளஸ் 15ஐ போன்ற கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஒன்பிளஸ்15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 இரண்டும் ஒப்போ இ-ஷாப், ஜெடி மால் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அக்டோபர் 27 அறிமுகத்திற்குப் பிறகு அவை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 1.5K OLED ஸ்கிரீன் கொண்டிருக்கலாம். இத்துடன் 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 1.5K BOE OLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News