மொபைல்ஸ்

100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ஒன்பிளஸ் 11?

Published On 2022-12-13 09:47 IST   |   Update On 2022-12-13 09:47:00 IST
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
  • புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாசி கிரீன், மேட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 11 விவரங்கள் சீனாவின் கம்பல்சரி சர்டிஃபிகேஷன் ஆஃப் சைனா (3C) வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த வலைதளத்தில் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்களும் தெரியவந்துள்ளது. மேலும் புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இதன் சார்ஜர் 5V/2A மற்றும் 5-11V/9.1A அவுட்புட் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், PHB110 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 11 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3C வலைதளத்தில் வெளியாகி உள்ளது. வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் சார்ஜர் VCBAJACH எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் கிளாசி கிரீன் மற்றும் மேட் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. இத்துடன் பன்ச் ஹோல் கட்அவுட், 2K ரெசல்யூஷன், 16 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 32MP சென்சார் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News